செய்திகள்

தலைமன்னார்- மதவாச்சி ரயில் சேவையை மோடி ஆரம்பித்து வைப்பார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை வியஜத்தின்போது தலை மன்னாருக்கும் மதவாச்சிக்குமிடையிலான கொழும்பு வரையிலான முதலாவது ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார்.

1990 ஆம் ஆண்டு மன்னார் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இந்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் ரயில் ரயில் பாலங்களும் ரயில் நிலையங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை பாராளுமன்றத்தில் இறையற்ற இருக்கும் அவர், அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்வார். அனுராதபுரத்தில் மகாபோதிக்கு செல்லவிருக்கும் அவர், யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியினால் கட்டப்படவிருக்கும் ‘யாழ்ப்பாண கலாசார நிலையத்துக்கான’ திரையை நீக்கம் செய்வார்.