செய்திகள்

தலை வாழை இலையில் விருந்து வைத்த விஜய்

‘புலி’ படப்பிடிப்பில் 700 தொழிலாளர்களுக்கு நடிகர் விஜய் பிரியாணி விருந்து அளித்தார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். விஜய், சுருதிஹாசனின் பாடல் காட்சி ஒன்று அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்க விஜய் முடிவு செய்தார். அதன்படி, நேற்று இந்த தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

விஜய் படக்குழுவினர் 700 பேருக்கும் தனது கைப்பட பிரியாணி பரிமாறி சாப்பிட வைத்தார். லைட்மேன்கள், துணை நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் நடிகர்கள், டிரைவர்கள், உதவி இயக்குனர்கள் உள்பட பலரும் விருந்து சாப்பிட்டார்கள்.

 

பின்னர் அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார். ஏற்கனவே கத்தி படப்பிடிப்பின் இறுதியிலும் விஜய் இதே போல் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.

முன்னதாக கடந்த வாரம் நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய். புலி படத்தில் விஜய் மூன்று வித கெட்டப்புகளில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.