செய்திகள்

தல தளபதி ரசிகர்களிடம் சிம்பு வேண்டுகோள்

இணையத்தில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றையதினம் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சமூகத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அதற்கு பதிலடியாக விஜய்யை கேலிசெய்யும் விதமாக தளங்களில் பதிவுசெய்தனர்.

இது குறித்து சிம்பு தனது சமூகத்தளப் பக்கத்தில் தெரிவிக்கையில் –
ஒரு உண்மையான தல ரசிகனாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் எதிர்மறை பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே. ஏனெனில், அது நம் நோக்கம் அல்ல.

அதேபோல், விஜய் அண்ணா ரசிகர்களுக்கும் நான் முன்வைக்கும் கனிவான வேண்டுகோள், மற்றவர்களை கேலி செய்து அவர்கள் மனதை புண் படுத்தக்கூடாது என்பதே.

நீங்கள் விரும்பும் நடிகருக்காக  செய்ய விரும்புவது இத்தகைய செயலைத்தானா…எனவே சிறிய, பெரிய என அனைத்து நட்சத்திரங்களின் விசிறிகளும் தங்கள் அன்புக்குரிய நடிகரை ஆதரிப்பதை மட்டுமே செய்யவேண்டும்,  மற்றவர்களை தாழ்த்த வேண்டாம்.

முதர்ச்சியுடனும், மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அது தான் நம்முடைய இயல்பு.  இந்த பிளவு தான் நமது உண்மைத்தன்மையில் இருந்து பிரித்துவிடுகிறது.  நாமும் நமது சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். சாதி, மதம், தேசம் இவற்றை எல்லாம் கடந்து மனிதர்களை மதிக்க முதலில் கற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.