செய்திகள்

தாஜுதின் கொலையை விபத்தாக மாற்ற உத்தரவிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் யார்?

வசீம் தாஜுதினின் கொலை தொடர்பான சாட்சியங்களை மூடி மறைக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஆலாசனை வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணை பொறுப்பதிகாரி விசாரணையின் போது தனக்கு தெரிவித்ததாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள பொலிஸ் அதிகாரி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10