செய்திகள்

தாஜூதீனின் மரணம் தொடர்பான பரிசோதனை அறிக்கைள் ஒன்றுக்கொன்று முரன்

ரகர் விளையாட்டு வீரர் தாஜூதீனின் மரணம் தொடர்பான  பிரேதப்பரிசோதனை அறிக்கையும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கிருலப்பனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ரக்பி வீரரின் உடலில் காபன் மொனக்சைட் காணப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்கள அறிக்கையின் படி அவருடைய மரணம் வேறுவிதமாக சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்பாடாகக் காணப்படும் இந்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோச னையைப் பெற்றிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
அதேநேரம், தாஜூ தீனின் கையடக்கத்தொலைபேசிக்கு வந்த மற்றும் அவர் ஏற்படுத்திய அழைப்புக்கள் குறித்த விபரங்களைத் திரட்டுமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.