செய்திகள்

தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையை நிறைவு செய்ய இரு மாத அவகாசம்: நீதிமன்றம் உத்தரவு

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­தது. அத்­துடன் விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் கோரிக்­கைக்கு அமை­வாக குறித்த விசா­ர­ணை­களை நிறைவுசெய்ய இரு மாத கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டது.

றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு கொலை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்­றைய தினம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்­ளப்­பட்ட போதே நீதிவான் குறித்த கால அவ­கா­சத்தை வழங்கி மேற்­படி உத்­த­ர­வினைப் பிறப்­பித்தார்.

நேற்­றைய தினம் இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்­ளப்­பட்ட போது, விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரிவு தமது விசா­ர­ணை­களின் மேல­திக அறிக்கை ஒன்­றினை மன்­றுக்கு சமர்ப்­பித்­தது. அந்த அறிக்­கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நார­ஹேன்­பிட்டி மற்றும் கிரு­லப்­பனை பகு­தி­களில் இருந்து பெறப்­பட்ட இந்த படு கொலை­க­ளுடன் தொடர்­பு­டைய சீ.சி.ரி.வி. காணொ­ளிகள் அடங்­கிய இறுவட்­டினை கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா நிறு­வ­னத்­துக்கு அனுப்பும் பணிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் இறுதிக் கட்­டத்தில் உள்­ளன. மிக விரைவில் இவை ஆய்­வு­க­ளுக்கு அனுப்­பப்­படும்.

அத்­துடன் நார­ஹேன்­பிட்­டியில் உள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் தேர்­தல்கள் அலு­வ­ல­கத்தின் சீ.சி.ரி.வி.காட்­சி­களை புல­னாய்வுப் பிரி­வுக்கு கைய­ளிக்­கு­மாறு நீதி­மன்றம் விடுத்த உத்­த­ர­வுக்கு அமைய அந்த பதி­வுகள் எம்மால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

அதன்­படி டக்ளஸ் தேவா­னந்­தாவின் பார்க் வீதி, இலக்கம் 121, கொழும்பு – 5 என்ற முக­வ­ரியில் உள்ள அர­சியல் அலு­வ­ல­கத்தின் 2012.05.16 ஆம் திக­திக்­கு­ரிய சீ.சி.ரி.வி. பதி­வுகள் அடங்­கிய’ வன்தட்டை’ நாம் ஆராய்ந்தோம். அதன் போது வஸீம் தாஜு­தீனின் கொலை இடம்­பெற்­ற­தாக நம்­பப்­படும் காலப்­ப­கு­தியில் அந்த அலு­வ­ல­கத்தில் சீ.சி.ரி.வி. வச­திகள் எதுவும் இருக்­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது.’ என அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுடன் நேற்­றைய தினம் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க தெரி­விக்­கையில்:

“இது ஒரு நீண்ட நுணுக்­க­மான விசா­ர­ணை­யாகும். எனவே இந்த விசா­ர­ணை­களை நாம் நிறைவு செய்ய எமக்கு இன்னும் இரு மாத கால அவ­காசம் வேண்டும். இரு மாதங்­களில் இந்த விசா­ர­ணையின் முழு­மை­யான அறிக்­கையை மன்­றுக்குச் சமர்ப்­பிக்க முடியும்.’ என நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் தெரி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து, மேல­திக ஆய்­வுக்­காக பெறப்­பட்ட வஸீம் தாஜு­தீனின் உடல் உறுப்­புக்கள் சில மாய­மா­கி­யுள்­ளமை தொடர்பில் இலங்கை வைத்­திய சபை­யினால் முன்­னெ­டுக்­கப்பட்­டு­வரும் விசா­ர­ணைகள் தொடர்பில் அந்த சபை சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணியால் மன்­றுக்கு கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டன. அதன் போது குறித்த விசா­ர­ணைகள் இன்னும் பூர்த்­தி­யா­க­வில்லை என தெரி­வித்த அந்த சட்­டத்­த­ரணி விசா­ர­ணைகள் நிறைவு பெற்­றதும் அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பிப்­ப­தாக தெரி­வித்தார்.

முன் வைக்­கப்­பட்ட வாதங்­களை கருத் தில் கொண்­ட­ நீ­திவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­க­ளுக்­காக கோரிய இரு மாத கால அவ­கா­சத்தை வழங்­கி­ய­துடன், விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு உத்­த­ரவும் பிறப்­பித்தார். அதனைத் தொடர்ந்து இது குறித்த வழக்கை எதிர்­வரும் மே மாதம் 12 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­வ­தாக நீதிவான் அறி­வித்தார்.

வெள்­ள­வத்தை, முருகன் வீதியை வதி­வி­ட­மாகக் கொண்ட வஸீம் தாஜுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்­றுடன் மோதி­ய­வாறு எரிந்­து­கொண்­டி­ருந்த காரில் இருந்து கரு­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

R-06