செய்திகள்

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

இந்தியாவின் உத்ராபிரதேசில் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு அங்கு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் தொலைபேசி மூலம் அறிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது அங்கு வெடிகுண்டு சோதனைப் பிரிவினர் உள்ளிட்டோர் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. -(3)