செய்திகள்

தாடி பாலாஜி தற்கொலையா? அவரே பதில்

நடிகர் பாலாஜி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானார். இவரை தாடி பாலாஜி என்று அழைப்பார்கள்.

நேற்று லட்சுமி, துளசி, பயணம், உறவுகள், செல்வி, ரோஜா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய பாலாஜி என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உயிரிழந்த இயக்குனர் பாலாஜிக்கு பதில் நடிகர் தாடி பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து வெளியான செய்திகளை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில்,

என் உடல் நிலை பற்றி வதந்திகள் பரவியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தேசிய விருது, ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெறவும், ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்கவும் நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, எமன் எனக்கு கால்ஷீட் கொடுக்கவே மாட்டான். உங்கள் ஆசிர்வாதத்தால் நல்லாவே இருப்பேன் என்றார்.