செய்திகள்

தான் அரசன் அல்ல மக்கள் சேவகன் : ஜனாதிபதி

அரசனாக இல்லாது மக்கள் சேவகனாக மக்களுக்கு சேவையாற்றவே தான் ஜனாதிபதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பொலநறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்த பாகுபாடுமின்றியே நான் ஜனாதிபதியாக பணியாற்றுகின்றேன். நான்  அரசன் அல்ல மக்கள் சேவகன் , மக்களுக்காக சேவைகளை செய்பவன் கட்சி , இனம் ,மதம் என எந்த பாகுபாடுமின்றி சகல மக்களையும் ஒன்றிணைத்து நாட்டின் எதிர்காலத்துக்காக செயற்படுவதே எனது நோக்கம். என அவர் தெரிவித்துள்ளார்.