செய்திகள்

தான் அரசன் போன்று நடந்துக்கொள்ள மாட்டேன் : ஜனாதிபதி

தான் ஒரு போதும் அரசன் போன்று நடந்துக்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 33வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சராக இருந்த காலம் முதல் எனது மனைவியினால் வீட்டிலிருந்து வழை இலையில் சுற்றி அனுப்பும் உணவையே நான் பகலில் உண்பேன். எனது நன்பரொருவரினூடாகவே இது வெளியில் வந்தது. இந்நிலையில்  அரசன் அரசனை  போல் உண்ண வேண்டும். ஜனாதிபதி ஜனாதிபதியை போல் உண்ண வேண்டும். எனவும் கிராம சேவகர் போல் உண்ணக் கூடாது எனவும் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிக்கான வரப்பிரசதங்களை அனுபவிக்க தெரியாதவர் என்றும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் என்னை அரசன் போல் நடந்துக்கொள்ள வேண்டும் என்றா கூறுகிறார். அப்படி நான் நடந்துக்கொள்ளப் போவதில்லை. என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
n10