செய்திகள்

தான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன் : குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரரான குமார் சங்கக்கார எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.
குமார் சங்கக்கார அநுராதபுரம் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தான் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதாகவும் ஒருபோதும் அரசியலுக்கு வரவேண்டுமென தான் எண்ணியதில்லையெனவும் தன்னைப்பற்றி வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.