செய்திகள்

தான் செய்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள மஹிந்த

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்காது விட்டதே தான் செய்த தவறு எனவும் இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனியும் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மொனராகலை அம்பேகமுவ ரஜமகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை பழிவாங்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. என்னிடம் தவறுகள் கிடையாது என நான் கூறப்போவதில்லை தவறுகள் செய்துள்ளேன் அதாவது சிலரின் தவறுகளுக்கு நான் தண்டனை கொடுக்காது விட்டுவிட்டேன் இதுவே நான் செய்த தவறு இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். இதேவேளை இனியும் இது போன்ற தவறுகள் இடம்பெறாது என்பதனையும் கூறிக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.