செய்திகள்

தான் ஜோதிகா ரசிகை என்கிறார் நந்திதா

தான் ஜோதிகாவின் தீவிர ரசிகை என்றும், அவரைப் பார்த்தே தான் தான் நடிகையானதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை நந்திதா.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. அதனைத் தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயரெடுத்துள்ளார்.

இந்நிலையில், ராதா மோகன் இயக்கத்தில் கருணாகரன் ஜோடியாக நந்திதா நடித்துள்ள உப்புக் கருவாடு பட டீசர் நேற்று வெளியிடப் பட்டது. நடிகை ஜோதிகா இதனை இணையதளம் மூலமாக வெளியிட்டார்.