செய்திகள்

தான் தோன்றித்;தனமாக செயற்படும் நோக்கம் என்னிடம் இல்லை: ஜனாதிபதி

தான் தோன்றித்தனமான தலைவராக செயற்படும் அம்சங்கள் தன்னிடம் கிடையாது எனவும் அப்படி செயற்படும் நோக்கம் தனக்கு இல்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பு விகாரமகா தேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆளுமையில்லாத தலைவர் , தலைவருக்காக அம்சங்கள் இவரிடம் கிடையாது , இவர் இந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் இன்றெல்லாம் என்னைப்பற்றி ஊடகங்கள் உட்பட பலர் கூறுவதை கேட்டுள்ளேன். அவர்களின் பார்வைக்கு நான் அவ்வாறு தெரிவதற்கு காரணமுண்டு. இது வரை காலம் சர்வாதிகார போக்குடன் தான் தோன்றித்தனமாக செயற்பட்ட தலைவர்களையே அவர்கள் கண்டு வந்தனர்.
ஆனால் நான்அப்படி சர்வாதிகார போக்குடன் செயற்படுபவன் அல்ல. இதனால் அந்த அம்சங்களை என்னிடம் காண முடியாது. அத்துடன் நான் காட்டவும் போவதுமில்லை அதற்கான தேவையும் எனக்கு கிடையாது. இவ்வாறாக நான் இருப்பதினால் மக்கள் 5 நட்சத்திர ஜனநாயகமல்ல 7 நட்சத்திர ஜனநாயகத்தை அனுபவிக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.