செய்திகள்

தான் முன்னெடுத்த போராட்டத்தால் ஜனாதிபதி காப்பாற்றப்பட்டார் : சோமவன்ச

தான் மே தினத்தன்று முன்னெடுத்த போராட்டத்தால்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காப்பற்ற முடிந்துள்ளதாக ஜே.வி.பியிலிருந்து விலகிய அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க  தெரிவித்துள்ளார்.
கொழும்பில்  நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மே 1ம் திகதி தான் முன்னெடுத்த போராட்டத்தால் ஜனாதிபதி பாதுகாப்பில் இருந்தவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி 62 லட்சம் மக்களின் தலைவரை பாதுகாக்க நான் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய மூன்று பேர்  துப்பாக்கியுடன்  வந்துள்ளனர். நான்காவது தடவை அது வெற்றியளிக்கும் வரை பார்த்துக்கொண்டு இருக்காது  சூழ்ச்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை அமைக்க அனுமதி கோரியுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கொல்லப்பட்டால் அல்லது மரணித்தால் நாட்டின் அதிகாரம் இரண்டு வாரங்களுக்கு பிரதமர் கையில் இருக்கும் என்றும் அதற்குள் பெரும்பான்மை ஆசனம் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள் தலைவரை மீண்டும் அந்த இடத்துக்கு கொண்டுவர முயற்சிக்கும் என்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.