செய்திகள்
தாயுடன் சண்டையிட்ட தந்தையை கொலை செய்த மகன் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை (படங்கள்)
வீட்டில் மது போதையில் தாயுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தந்தையை கூரியஆயுதத்தால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞனொருவன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொலனறுவை கனன்கொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தந்தை , தாய் மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் வசித்துள்ள நிலையில் நேற்றைய தினம் தந்தை மது போதையில் தாயுடன் சண்டையில் ஈடுபட்ட போது பொறுமையிழந்த 20 வயதுடைய டைய இளைய மகன் கூரிய ஆயுதத்தால் அவரை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து வெலிக்கந்தை பகுதியில் ரயிலுக்கு முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.