செய்திகள்

தாயும் மகளும் கொலை – சந்தேக நபா் தப்பியோட்டம் (படங்கள்)

நுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் 52 வயதுடைய ஆண்டி பேச்சாய் என்ற தாயும் 32 வயது மதிக்கத்தக்க பெரியசாமி நித்தியகல்யாணி எனும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தே நபா் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்,20.04.2015 இன்று அதிகாலை 3 மணியளவில் இக்கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இக்கொலையை புரிந்தவர் தப்பியோடி தலை மறைவாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி நீதிவான் எம்.கே. மகிந்த மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு பொலிஸார் சந்தேகிக்கும் சந்தேக நபரான குறித்த தாயின் மகனை தேடி வருகின்றனர்.

Murder (5)

Murder (7)

Murder (8)