செய்திகள்

தாயொருவர் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி : ஒருவயது குழந்தை பலி

கொஸ்வத்தை இகல கொட்டாரமுல்லை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றில் பாய்ந்துள்ளதாகவும் இதன்போது  தாயும் ஒருபிள்ளையும் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் இதன்போது பிரதேச வாசிகள் அந்த பெண்ணையும் பிள்ளையொன்றையும் காப்பாற்றியுள்ளதுடன் மற்றைய பிள்ளை நீரில் மூல்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.