செய்திகள்

தாய்வான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 12 பயணிகள் பலி! 17 பேர் மீட்பு (படங்கள்)

தாய்வானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணி துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது.

தாய்வான் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்று காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா ATR 72-600 பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது. இதற்கான படங்களை தைவான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சரியாக 10.55 மணிக்கு விமானத்துடன் தகவல் தொடர்பு இல்லாமல் சென்றதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் கிடைத்த தகவலோடு உடனடியாக மீட்புப் பணியினர் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்படி விமானத்தின் பாதி பாகம், கீலுங் ஆற்றில் மூழ்கியுள்ளது.

தற்போதைய நிலையில் 12 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்வான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடும்போது, “ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை தெரியவில்லை. ஆனால் அதில் 10 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் பணிகளை தொடர்கிறோம்” என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் டிரான்ஸ் ஏசியா விமானம் பெங்கூ தீவில் விபத்துக்குள்ளாகி 48 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலையால் ஏற்பட்ட அந்த விபத்தை தொடர்ந்து அதே நிறுவனத்தின் மற்றொரு பயணிகள் விமானம் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

01

1 (5)

0