செய்திகள்

தாய் நாடு அமைப்பு கொழும்பில் நடத்தும் யுத்த வெற்றி நிகழ்வில் மஹிந்த பங்கேற்பார்; பந்துல குணவர்தன

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிய சகலரையும் நினைவு கூறும் வகையில் நாளை 18ம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொள்ளவுள்ளதகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.
கலைஞர்கள்அடங்களாக பல்வேறு துறையினர் இணைந்து அமைத்துள்ள தாய் நாடு எனும் அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே பந்துலகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.