செய்திகள்

திக்கிரித்தில் உள்ள ஐஎஸ் அமைப்பினரை சுற்றிவளைக்க முயற்சி

திக்கிரித் நகரத்திலுள்ள ஐஎஸ் அமைப்பினரை சுற்றிவளைப்பதற்கு ஈராக்கிய படையினரும், ஈரான் சார்பு சியா ஆயுதக்குழுக்களும் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசபடையினர் முன்னேறி வருவதாக அறிவித்துள்ள அரச தொலைக்காட்சி எனினும் வீதியோரங்களில் மறைத்துவைக்கப்பட்டுள்ள குண்டுகள் காரணமாக வேகம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளன.
திக்கிரித்தின் முக்கியமான கிராமங்களையும், எண்ணெய் வயல்கயையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு படையினர் விநியோக பாதையையும் மூடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

_81395136_81392091

முன்னாள் ஜனாதிபதி சதாமின் சொந்த ஊரான திக்கிரித்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்கமானது முதல் சுமார் 30000 ஈராக்கிய படையினரும்,ஈரான் சார்பு ஆயுத குழுவினரும் விமானங்களின் உதவியுடன் முன்னேறிவருகின்றனர்.
திக்கிரித்திற்கும் குர்திஸ் பேராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிர்குக்கிற்கும் இடையில் உள்ள முக்கிய வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.ஐஎஸ் அமைப்பின் முக்கிய விநியோக பாதை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
திக்கிரித்திற்கு வடக்காக உள்ள இரு கிராமங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் திக்கிரித் மற்றும் அல்டவுர் நகரங்களில் ஐஎஸ் அமைப்பினரின் பாதுகாப்பு அரண்களை ஈராக்கிய படையினர் இன்னமும் நெருங்கவி;ல்லை.
குறிப்பிட்ட அமைப்பின் வலுவிடம் என கருதப்படும் அல்டவுரை படையினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளதாகவும்,இன்னமும் தாக்குதல் ஆரம்பமாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் அமைப்பினர் மேலதிக தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும், அவர்களது விநியோகங்களை முடக்குவதற்குமே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த நகரங்களை முற்றுமுழுதாக சுற்றிவளைப்போம், அவர்களை மூச்சுத்திணறச்செய்வோம் அதன் பி;ன்னர் பாய்ந்து அழிப்போம் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.