செய்திகள்

திக்கிரித் ஐஎஸ் அமைப்பிடமிருந்து முற்றாக விடுவிப்பு

ஈராக்கிய அரசாங்கம் திக்கிரித்தை ஜஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஈராக்கிய பிரதமர் ஹைய்டர் அல் அபாடி இதனை அறிவித்துள்ளார்.தனது உத்தியோகப+ர்வ டிவிட்டரில் திக்கிரித்தை முற்றாக மீட்ட படையினர் மற்றும் ஈரானிய சார்பு ஆயுதக்குழுவிற்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஈராக்கிய படையினர் திக்கிரித்தின் மையத்தை அடைந்து கொடியை ஏற்றியபின்னர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐஎஸ் தாக்குதல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிட்டதா என்பது தெளிவாக இதுவரை தெரியவரவில்லை.
இது தவிர வீதியோரங்களிலும், விடுகளிலும் புதைத்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பாரிய சவாலும் ஈராக்கிய படையினருக்கு காத்திருக்கின்றது.திக்கிரித்தை கைப்பற்றும் நடவடிக்கை மார்ச் 2ம் திகதி ஆரம்பமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.