செய்திகள்

திசார பெரேராவின் பங்களிப்பு மிகவும் அவசியம்

இலங்கை அணியின் உலக கிண்ண சவாலிற்கு சகலதுறை ஆட்டக்காரர் திஸார பெரேரா மிக முக்கியமானவர் என மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை இது வரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியுசிலாந்து ஆடுகளங்களில் விக்கெட்களை வீழ்த்துவதற்கு சிரமப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்வரிசை துடுப்பாட்டமும் பலவீனமானதாக காணப்படுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக விளங்ககூடியவர் திசார. எனினும் அவர் கடந்த ஏழு போட்டிகளில் மிகமோசமாகவே விளையாடியுள்ளார்.

எங்களுடைய அணியின் முக்கியமான வீரர் அவர், ஆனால் அவர்இதுவரை சோபிக்கவில்லை,அவர் சிறப்பாக விளையாடினால் வெற்றி எங்கள் பக்கம்,இதுவரை அவரிற்கு கிடைத்துள்ள ஆட்ட நாயகன் விருதுகளே இதற்கு ஆதாரம், அவர் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறார் என ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அணி வெல்லும் என எவரும் இதுவரை கருதவில்லை,இலங்கையில் கூட எவரும் நம்பவில்லை, ஆனால் கடந்த காலங்களில் நாங்கள் இவ்வாறான நிலையிலிருந்து அனைவரினதும் கணிப்புகளும் பொய்யானவை என்பதை நிரூபித்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார்.