செய்திகள்

திட்டமிடப்பட்ட தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

எதிர்கட்சியினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்ட வகையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் கீர்த்திதென்னக்கோன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.
தேர்தல் வன்முறைகள் அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ளன.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 1073 குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளன.
அதிகரித்து வரும் வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டவையாக காணப்படுகின்றன,எதிர்கட்சியினரை இலக்குiவைத்தே அவை இடம்பெறுகின்றன,என அவர் குறிப்பிட்டுள்ளார்.