செய்திகள்

தினேஷை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு 58 எம். பிக்கள் ஆதரவாம்

மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்குவதற்கு 58 பராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு சபாநாயகர் சாமல் ராஜபச்க்ஷவை கேட்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினேஷை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளதாகவும் முன்னர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவை திர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு ஆதரவளித்தவர்கள் தினேஷை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.