செய்திகள்

திமுகவின் ஊழல் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா வலியுறுத்தல்

நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டு என பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில், நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜெயலலிதா, மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 47 வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா, முல்லைப்பெரியாறு பிரச்சனையில், மக்களுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். உச்சநீதிமன்றம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி என அடுக்கடுக்கான ஊழல் முறைகேட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஈடுபட்டதாக ஜெயலலிதா விமர்சித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் வாக்குசேகரித்த வந்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

N5