செய்திகள்

திமுக – காங். தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்க சில காலம் ஆகும்: குலாம் நபி ஆசாத்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார்.

பேச்சுவார்த்தையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் குழுவினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரும் பங்கேற்றனர்.

எனினும், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவது என்பது குறித்து இந்த சந்திப்பின்போது முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தொகுதி பங்கீடு குறித்து திமுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்.

N5