செய்திகள்

தியலும நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த இளைஞனின் சடலம் மீட்பு (Photos)

பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் இருந்து ஒரு இளைஞனும், யுவதியும் வீழ்ந்து உயிரிழந்துள்ளனா்.

19.04.2015 அன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் தியலும – நிகபொத பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டர்வர்கள் என தெரியவந்துள்ளது.

குடும்ப முறுகல் காரணமாகவே அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்டஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்ய முன்னர் உறவினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இவர்கள் அது பற்றி கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19.04.2015 அன்று மாலை உயிரிழந்த 17 வயதுடைய யுவதியின் சடலம் மாத்திரம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த பிரதேசத்தில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக 19.04.2015 அன்று இளைஞரின் சடலத்தை தேடும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

எனினும் 20.04.2015 அன்று குறித்த இளைஞரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனா்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் 17 வயதுடைய சரவணா யோகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொஸ்லந்தை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

vlcsnap-2015-04-20-11h25m14s123

vlcsnap-2015-04-20-11h25m20s191

vlcsnap-2015-04-20-11h25m51s241

vlcsnap-2015-04-20-11h25m54s15

vlcsnap-2015-04-20-11h25m58s59