செய்திகள்

திரிஷாவும் நானும் சகோதரிகளாக பழகுகிறோம் என்கிறார் ஹன்சிகா

திரிஷாவும் ஹன்சிகாவும் ஒரே படத்தில் இணைந்து நடித்தாலும், தங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை என்றும் , தாங்கள் சகோதரிகளாக பழகுவதாகவும் ஹன்சிகா கூறுகிறார்.

ஒரு படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்கள் என்றால், அதில் யாருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதில் நிச்சயமாக பிரச்சினை இருக்கும். அதிலும், இருவருமே முன்னணி நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், இதிலிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் திரிஷாவும், ஹன்சிகாவும்.