செய்திகள்

திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை சிவன் கோயில் சந்தியில் ஆரம்பமான மே தினப் பேரணி திருகோணமலை கடற்கரையிலுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கு வரை சென்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் மே தின உரை இடம்பெற்றது.