செய்திகள்

திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கான பிராயச்சித்தமாக சமயத்தலைவர்கள், பக்தர்களின் ஆலோசனையின் பிரகாரம் சம்புரோட்சண யாகம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நேற்று நடைபெற்ற நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)