செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பொருட் கொள்வனவு

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று காலை 6 மணியிலிருந்து திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பொருட் கொள்வனவுக்காக நகருக்கு வருகைதந்தனர்.ஆங்காங்கே வீதி ஓரங்களில் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் என்பன விற்பனை செய்யப்படுவதன் காரணமாக மக்கள் இலகுவாகவும் சுகாதார இடைவெளியைப் பேணக்கூடியவாறும் பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் நெருக்கமாக பொருட்களை கொள்வனவு செய்வதனை தடுக்கும் முகமாக திருகோணமலை பொதுச் சந்தையின் நடவடிக்கைகள் அனைத்தும் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது, மக்கள் பாதுகாப்பாக வீதிகளில் செல்வதையும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.(15)Curfew-Released-Time-Trinco-Situation-Coronavirus-Alert-Situation-16.04.2020