செய்திகள்

திருட்டு அரசியல்வாதிகளிடமிருந்து தேவாலய உண்டியல்களை பாதுகாக்க போராடும் கடவுள் : ஜே.வி.பி கூறும் கதை

தேவாலயங்களுக்கு படையெடுக்கும் திருட்டு அரசியல்வாதிகளிடமிருந்து அங்குள்ள உண்டியல்களை பாதுகாக்க வேண்டிய நிலைமைக்கு கடவுள் தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வ.பி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருட்டில் ஈடுபட்ட அரசியலவாதிகள் தற்போது தேங்காய்களுடன் தேவாலயங்களுக்கு  சென்று மற்றையவர்களுக்கு எதிராக சாபமிடும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இன்று திருடர்கள் கூடுமிடமாக தேவாலயங்கள் மாறிவிட்டன. இதனால் அங்குள்ள உண்டியல்களை பாதுகாப்பதற்காக சீ.சீ.டி.வி கமராக்களை நம்பவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. கடவுளுக்கே இந்த நிலைமையென்றால் சாதாரண மக்களின் நிலைமை எப்படியிருக்கும். என சிந்திக்க வேண்டியுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10