செய்திகள்

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வோர் தம்பதிகளே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் இருவரில் ஆண் துணைவரின் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், அமிதாவாரய் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் தம்பதிகளாக அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அந்த உறவு சட்ட விரோதமானது என குற்றம்சாட்டுபவர்கள் அதையும் நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.