செய்திகள்

திருமதி இலங்கை அழகிப் போட்டி சர்ச்சை – கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா கைது

அண்மையில் நடைபெற்ற, திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா ஆகிய இருவரும் கறுவாத்தோட்டப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு கறுவாத்தோட்டப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை அழைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில், திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா, அவர்கள் இருவர் மீதும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டுக்கமை, இருவரிடமும் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.(15)