செய்திகள்

திரும்பிப்பார்த்தல்-1975 -ஸ்டுவர்ட் வாக்

உலகிண்ணப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் இரு சிறந்த அணிகள் விளையாடுவதே பொருத்தமானது. எனினும் இதுவரை இறுதிப்போட்டிகளில் ஓரு அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதையே காணமுடிந்துள்ளது.  இதற்கு மாறாக இறுதிப்போட்டிக்கு முன்னைய போட்டிகளில் ஒன்றே திருப்புமுனையாக அமைந்துவிடுகின்றது.
1975 உலக கிண்ணப்போட்டிகளின் போதும் இவ்வாறானதொரு போட்டி காணப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவுடனான இறுதிபோட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் பாக்கிஸ்தானுடனான அதன் போட்டியே மிகமுக்கியமானதாக அமைந்தது.  பாக்கிஸ்தான் தனது உலகிண்ண வாய்ப்புகளை தக்கவைப்பதற்காக வெல்ல வேண்டிய ஓரு போட்டியில் அணித்தலைவர் மஜீத்கான் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பபெடுத்தாட தீர்மானித்தார். ஜாவிட் மியன்டாட்டின் முதலாவது ஒரு நாள்போட்டியது.  மேற்கிந்திய தீவின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளித்து பாக்கிஸ்தான் 60 ஓவர்களில்(அப்போது அறுபது ஓவர்கள்) 7 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.அணித்தலைவர் மஜித்கான் 60 ஓட்டங்களையும் முஸ்தாக் முகமத் 55 ஓட்டங்களையும் வாசிம்ராஜா 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்திய அணி இந்த இலக்கை இலகுவாக பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது.அதன் துடுப்பாட்ட பலம் அவ்வளவு அச்சுறுத்தலானாது.  எனினும் பாக்கிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சவ்ராஸ் நவாஸ்இந்த எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே தவிர்த்தார், கோர்டன் கிரினிஜ், அல்வின் காளிச்சாரன் போன்ற ஜாம்பவான்களை ஆரம்பத்திலேயே வெளியேற்றினார். அணி 3-36 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அணித்தலைவர் கிளைவ்லொயிட் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவேளை அணியின் நம்பிக்கைள் முற்றாக தகர்ந்தன, மேற்கிந்திய அணி வெற்றிபெறுவதற்கு117 ஓட்டங்கள் தேவைப்பட்டன,மூன்று விக்கெட்கள் மாத்திரமே கையிலிருந்தன.
பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத்தினால் மேற்கிந்திய அணி ஓரளவு ஓட்டங்களை பெற்றபோதிலும் ஓன்பதாவது விக்கெட் விழுந்தவேளை அணி வெற்றிபெறுவதற்கு 14 ஓவர்களில் 64 ஓட்டங்களை பெறவெண்டியிருந்தது.பாக்கிஸ்தானை பொறுத்தவரை ஓரேயொரு விக்கெட் மாத்திரமே அவசியம் என்ற நிலை காணப்பட்டது.
ஆனால் அணியால் அந்த ஓரு விக்கெட்டைஇறுதிவரை வீழ்த்த முடியவில்லை.  அன்டி ரொபேட்ஸ் நிதானமாக விளையாடினார் ஆனால் அடிக்கவேண்டிய பந்துகளை அடித்தார்,அன்டி மரே அடித்துவிளையாடினாhர்,இருவரும் ஒரு ஓவரிற்கு 4 அல்லது 5 ஓட்டங்களை பெற்றனர்.

இறுதி இரண்டு ஓவர்கள் ஐந்து ஓட்டங்கள் என்ற நிலைக்கு போட்டி தள்ளப்பட்டது,59 ஓவரை பெர்வேஸ் மிர் என்ற மிதவேகப் பநது வீச்சாளர் வீசினார் அது மெய்டன் ஓவர்.  இறுதி ஓவரை வாசிம்ராஜா வீசினார், வேகப்பந்து வீச்சாளர்கள்அனைவரும் தங்கள் 12 ஓவர்களை வீசி முடித்துவிட்ட நிலையில் பாக்கிஸ்தான் அணித்தலைவர் சுழற்பந்துவீச்சாளரையே பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.எனினும் ராஜா சுழற்பந்தவீச்சில் ஈடுபடாமல் மிதவேகப்ந்துகளை வீசினார்.  மேற்கிந்திய அணயின் இறுதிஜோடி அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே எவரும் நினைத்து பார்க்காத அந்த வெற்றியை பெற்றது.