செய்திகள்

திரைக் கதையாக கல்கியின் ‘பொன்னியின் செல்வன் – விரைவில்

ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைக்குக் கொண்டு வரும் முயற்சியின் இறங்கியுள்ளது. ஆனால் திரைப்படமாக இல்லாமல், பகுதிகளாகப் பிரித்து இணையத்தில் பதிவேற்றவுள்ளது.

எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என பலர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் எவரது முயற்சியும் முழுமையடையவில்லை. தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராக பணியாற்றும் ஈராஸ் நிறுவனம், பொன்னியின் செல்வனை கையிலெடுத்துள்ளது. ஆனால் திரைப்படமாக அல்லாமல் பகுதிகளாகப் பிரித்து இணயத்தில் பதிவேற்றப்படுகிறது.

“தொலைக்காட்சியில் திரையிடவோ, விசிடிக்களாகவோ இல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் பணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம்” என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் தர முயற்சித்தபோது எழுத்தாளர் ஜெயமோகனை திரைக்கதை எழுதினார். தற்போது ஈராஸ் நிறுவனமும் ஜெயமோகனையே அணுகியுள்ளதாகத் தெரிகிறது. படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஈராஸ் கூறியுள்ளது.