செய்திகள்

திரைப்படத்துக்கு கதை எழுதும் ரஹ்மான்

தமிழகத்தின் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படம் ஒன்றுக்கு இப்போது கதை எழுதிவருகின்றார். ரஹ்மான் திரைப்படம் ஒன்றுக்கு கதை எழுதுவது இதுவே முதல் முறை என்பதால் இது சினிமா துறை வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளராக ஜொலிக்கும் ஒவ்வொருவரும் இப்போது நடிப்பு, இயக்கம், தயாரிப்பு,நடிப்பு என மற்ற துறையிலும் கால் பதிக்க துவங்கி விட்டனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் , ஷங்கர் கணேஷ் உள்ளிட்ட பழம்பெரும் இசையமைப்பாளர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இப்போது இந்த வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மான் கதை ஒன்றை எழுதி வருகிறாராம். மும்பையில் நடைபெற்ற ‘ஐ’ இந்தி இசை வெளியீட்டு விழாவில் இதை பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவர் கூறுகையில், எனக்கு இயக்குநர் ஆகும் எண்ணம் இல்லை, ஆனால் கதை ஒன்றை எழுதி வருகிறேன், அதை இணைந்து தயாரிக்கவும் உள்ளேன் . அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.