செய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுபான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை மூடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மதுபான சாலைகள் திறக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் பொது மக்களின் அன்றாட தேவைகளைத் தாண்டி மதுபான சாலைகளில் மிக நீண்ட வரிசையில் குடிமகன்கள் நின்றதை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)