செய்திகள்

திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் திறந்துவைக்கப்பட்டது (படங்கள்)

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசீம் ஆகியோர் தலைமையில் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை இலவசமாக இதனை பார்வையிட முடியும்

யானைகள் சரணாலயத்திற்கு அண்மித்து அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை கண்டு ரசிக்க முடியும்.அத்துடன் இந்த விலங்கினங்களின் அன்றாட நடவடிக்கைகளையும் உல்லாசப் பிரயாணிகள் அவதானிக்க முடியும்.

இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலை 862 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான 488 மில்லியன் ரூபா திறைசேரி மூலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
02
01
00
03