செய்திகள்

திறந்திருந்த வீட்டில் 11 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் கொள்ளை: யாழ்.கோண்டாவிலில் துணிகரம்

யாழ்.கோண்டாவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமையிரவு உள்நுழைந்த திருடன் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, மற்றும் பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர் வெளியில் சென்று வந்த பின்னர் வீட்டின் கதவை மூடாமல் சென்று நித்திரையில் ஆழ்ந்துள்ளார்.

மூடாத கதவு வழியாக வீட்டினுள் உள்நுழைந்த திருடன் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 27 பவுண் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளான்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நகர் நிருபர்-