செய்திகள்

திவிநெகும மோசடி தொடர்பாக பஸிலிடம் விசாரணை நடத்தப்படும்: பொலிஸ் திணைக்களம்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் கோடி கணக்கான ரூபா நிதி மோசடி தொடர்பாக நாடு திரும்பியுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவிநெகும திணைக்களத்தில்  இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக பாரியளவிலான நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்கான நீதி மன்றத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி அவரிடம் விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.