செய்திகள்

திஸ்ஸநாயக்கவை ஐ.தே.கவிலிருந்து நீக்கும் நடவடிக்கை தவறானது : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை அந்த கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையானது முறையாக இடம்பெற்றது அல்லவெனவும் அது சட்டத்துக்கு புறம்பானது எனவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பாக திஸ்ஸஅத்தநாயக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இவர் கட்சித்தாவியிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினர் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.