செய்திகள்

திஸ்ஸவுக்கு நான் கொடுத்தது இலஞ்சம் என்றால் மைத்திரி ரணிலுக்கு கொடுத்தது என்ன? மஹிந்த கேள்வி

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் கொடுத்தது இலஞ்சமென்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலுக்கு கொடுத்ததும் இலஞ்சமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹேனகம அரமங்கொட விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் பதவியை திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வழங்கியமையை இலஞ்சம் என கூறுகின்றனர். அப்படியென்றால் தற்போதைய ஜனாதிபதியாக வந்த பின்னர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கியமையும் இலஞ்சம் இல்லையா?

அது பரிசாம் இது வேடிக்கiயான விடயமே. 30 வருடமாக அரசியலில்இருக்கின்றேன். இது போன்று மாதக் கணக்காக மற்றைய தரப்பினரை பழிவாங்கும் செயற்பாடுகளை கண்டதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.