செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆவணம் போலியானது என்று நிரூபணம்

அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டிருந்த மைத்திரி-ரணில் ஒப்பந்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இ ரசாயனப் பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டை பிரிப்பது உட்பட பல விடயங்களை மைத்திரிபாலவும் ரணிலும் இந்த இரகசிய உடன்படிக்கையில் செய்திருந்ததாக இந்த ஆவணத்தை வைத்து அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கு எதிராக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் நீதிமன்றத்தில் முறையிட்டதன் அடிப்படையில் இந்த ஆவணம் இரசாயன பகுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன அடிப்படையில் நடைபெற்ற பகுப்பாய்வின் போது இந்த ஆவணம் போலியானது என்றும் அதில் இருக்கும் கையொப்பங்கள் ஸ்கான் செய்து எடுக்கப்பட்டு, போலியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் ரசாயனப் பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் மைத்திரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை, போலியான கையெழுத்து முயற்சி, போலியான ஆவணம் தயாரிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்குத் தொடரப்படவுள்ளது.