செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறைச்சாலைக்கு விஜயம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பார்வையிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினரே அவரை பார்வையிட்டு நலன் விசாரித்துள்ளனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா, நிசாந்த ரணதுங்க மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரே அவரை பார்வையிட்டுள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.