செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்க இரகசிய பொலிஸாரால் கைது: 11 வரை விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நண்பகல் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

1 (4)