செய்திகள்

தி.மு.க. மேல்முறையீடு செய்யும்: கருணாநிதி அறிவிப்பு!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றுள்ளார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்த வழக்கின் முதல் தரப்பான கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வது குறித்து இன்னமும் இறுதி முடிவெடுக்கவில்லை. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதிர்ப்பு அதிகரித்துள்ளது.