செய்திகள்

தி.மு.க.,வில் சுறுசுறுப்பு

சென்னை: தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகுதிகள் முறைப்படி அறிவிக்கப்பட்டு வருகின்றன. கேட்ட தொகுதிகள் கிடைத்ததால் சிறிய கட்சிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் மொத்தம் 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -5 , மனித நேய மக்கள் கட்சி- 5, புதிய தமிழகம் – 4 பெருந்தலைவர் மக்கள் கட்சி -1விவசாய தொழிலாளர் கட்சி-1 சமூக சமத்துவ படை கட்சி – 1 என பிரித்துள்ளன.

இதன் படி யார் எந்த எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் காங்கிரசுக்கான இடங்கள் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டன. இன்று ( 9 ம் தேதி ) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கான தொகுதிகள் உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி இந்த கட்சி போட்டியிடும் இடங்கள் வருமாறு: வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகும்.

புதிய தமிழகத்திற்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், கிருஷ்ணராயபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியன அடங்கும்.

பங்கீடு தொடர்பாக இந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில்; தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்தது. எங்களுக்கு ஒதுக்கிய இடங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இன்றைய தொகுதி பங்கீடு குறித்து திமுக., பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில்; அதனத்தும் சுமுகமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரிரு நாளில் அதாவது நாளை மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்றார்.

N5