செய்திகள்

தி.மு.ஜயரட்ன இன்னும் பிரதமரே , அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக நீக்கப்படவில்லை : உதய கம்மன்பில

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கின்ற போதும் கடந்த அரசாங்கத்தில் பிரதமாராக பணியாற்றிய தி.மு ஜயரட்ன இன்னும் அந்த பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக  நீக்கப்படவில்லையெனவும் இதன்படி தற்போது நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருப்பதாகவும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு அபயாராம விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 42வது உறுப்புரிமையின் பிரகாரம் பிரதமர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவும் பட்சத்திலேயே புதிய பிரதமர் நியமிக்கப்படமுடியும். அவர் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் இருப்பாராகவிருந்தால் அவரை உத்தியோகபூர்வமாக பதவி விலக்கிய பின்னர். அல்லது அவர் பதவி விலகும் பட்சத்திலேயே புதிய பிரதமர் நியமிக்கப்படமுடியும்.
இதன்படி தி.மு.ஜயரட்ண இன்னும் பிரதமரே. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தாலும் ஜயரட்ன இன்னும் அதிலிருந்து விலக்கப்படவில்லை. தானே பிரதமர் என கூறிவிடுவார் என்று பயந்தே அவருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. என கம்மன்பில தெரிவித்துள்ளார்.